[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

ஆழியாறு அணையைத்‌ திறக்க முதல்வர் உத்தரவு

tomorrow-aliyaru-dam-open-jayalalitha

கோவை மாவட்டம் ஆழியாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆழியாறு அணையின் ஐந்து பழைய வாய்க்கால் பகுதிகளில் முதல் மற்றும் இரண்டாம் போக பாசனங்களுக்கும் பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் ஆகியோரிடம் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதனால் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுவதுடன் பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவையும் நிறைவேறும் என ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close