[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

தலைவர்களின் பரப்புரையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த சென்னை மக்கள்

leaders-campaing-people-affected-by-chennai-traffic

ஒருபுறம் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் சென்னையில் நேற்று மாலை நிகழ்த்திய பரப்புரைக்கு மக்கள் கூட்டம் அலைமோதினாலும் இன்னொருபுறம் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனால் அவர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.

பிரதமர் மோடி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பரப்புரை மேற்கொண்டதை அடுத்து அவர் வரும் பாதையில் நிறைய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதனால் விமான நிலையம் செல்லும் சாலை, நந்தனம் ஆகிய பகுதிகளில் மக்கள் சாலைகளில் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.

இதே போன்று ஆர்.கே நகர் பகுதியில்‌ முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரப்புரை பயணத்தால் வைத்தியநாதன் மேம்பாலம், கொடுங்கையூர்சாலை, எழில் நகர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

திமுக தலைவர் கருணாநிதியின் பரப்புரை பயணத்தால் புதிய ஆவடி சாலை,அம்பத்தூர் எஸ்டேட், ஆகிய பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலால் 5 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக என அவ்வழியே சென்ற மக்கள் தெரிவித்தனர்.

இது போன்ற சமயங்களில் நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் பரவலான கருத்தாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close