[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மவுலிவாக்க‌த்தில் 11 மாடி அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்படுமா? உச்ச நீதிமன்றக் குழு ஆய்வு

chennai-moulivakkam-building-collapse-case-supreme-court-team-inspection-at-moulivakkam

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்தது.

2014ஆம் ஆண்டு இடிந்து தரைமட்டமான குடியிருப்புக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தின் தன்மை குறித்து நால்வர் குழு ஆய்வு செய்தது. வழக்கறிஞர்கள் அசோக் குமார் குப்தா, கவுரவ் அகர்வால், டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர் பி. ஷஷாங்க் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று காலை 11 மணிக்கு ஆய்வைத் தொடங்கினர். சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உறுதி குறித்து ஆய்வு செய்தனர். இந்தக் குழு வரும் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மவுலிவாக்கம் கட்டடத்தை இடிக்க சென்னை உயர்நீதிமன்‌றம் தடை விதித்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனைத் தொடர்ந்து மவுலிவாக்கம் கட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் நால்வர் குழுவை அமைத்தது. 2014ஆம் ஆண்டு மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close