[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

நெல்லையில் தோல் உரியும் சிறுவனுக்கு சிகி‌ச்சை: நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம் என கருத்து

mysterious-disease-to-nellai-child

தோல் உரியும் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனை முற்றிலுமாக குணப்படுத்த இயலாவிட்டாலும், நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த இயலுமென நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா தெரிவித்தார்.

தோல் உரியும் நோயினால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் மந்திரமூர்த்தி, கடந்த 24-ம் தேதி முதல் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அவரை பரிசோதித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா, நெருங்கிய சொந்தங்களிடையே திருமணம் செய்துகொள்வோரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட ‌வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த நோய்க்கான அரிய வகை மருந்துகள் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலா‌ளர் ஆகியோரின் தனிக் கவனத்தின்பேரில் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close