[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.14 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மதுரை அருகே பனையூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை

college-student-raped-and-killed-in-madurai

மதுரை அருகே பனையூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.

மதுரை அருகே பனையூரில் செவிலியர் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சரண்யா என்ற மாணவி,நேற்று விடுமுறை என்பதால்,ஆடுகளை விரட்டி வர காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கே அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் சரண்யா வீடு திரும்பாததால்,சந்தேகம் அடைந்த அவரது தாயார், அவரைத் தேடி காட்டுக்குள் சென்றுள்ளார்.

அங்கு சரண்யா அரை நிர்வாணக் கோலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ந்த அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள், முதல் கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர், கைரேக நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியை முடக்கிவிட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.

சரண்யா காட்டுக்குள் சென்ற நேரத்தில், அங்கு விறகு வெட்ட சென்றவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close