[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஐ.டி.ஊழியர் உமா மகேஸ்வரி கொலை: 3 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

chennai-techie-rape-murder-case-madras-hc-confirms-three-convicts-s-life-sentence

ஐ.டி. ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சென்னை சிறுசேரியில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கிவந்த தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த உமா மகேஷ்வரி பாலியல் பலாத்காரம் செய்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட வடமாநில தொழிலாளர்களான ராம் மண்டல், உத்தம் மண்டல் மற்றும் உஜ்ஜல் மண்டல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை
விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடந்த 2014 நவம்பரில் தீர்ப்பளித்திருந்தது.

செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்ற்வாளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் 3 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், உமா மகேஸ்வரி குடும்பத்துக்கு 4 மாதத்துக்குள் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close