[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பட்டப் பகலில் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை

a-daily-worker-as-been-massacre-murder-in-dindigul

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கூலித்தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் முத்தழகு பட்டியைச் சேர்ந்தவர் அருள்சாமி.  இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டெய்சி பிரின்ஸ்சியா அதிமுக பிரமுகர் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒருமகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை தனது மகளை பழனி சாலையில் உள்ள முருகபவனத்தில் பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இந்திரா நகர் அருகே வரும்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அருள்சாமியை  வெட்ட வந்தனர்.

Image result for படுகொலை

இதனையடுத்து அதைப் பார்த்து அங்கிருந்து தப்பி ஓடினார் அருள்சாமி. ஆனால் விடாமல் விரட்டிச் சென்ற மர்மகும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, உடனே தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close