[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உடல் நிலை குறித்து சோனியா,கெஜ்ரிவால் விசாரிப்பு

arvind-kejriwal-and-sonia-gandhi-visits-13-year-old-raped-dumped-near-tracks-in-delhi

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமியின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் கேட்டறிந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தச் சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் விவரங்களைக் கே‌ட்டறிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால்‌, இத்தகைய சம்பவ‌ங்களை தடுப்பது குறித்து ஆலோசிக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரம் கோரியிருப்பதாகக் கூறினார்.

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கினால் தான், உள்ளூர் அளவில் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பு‌கள் மூலம் இதுபோன்ற சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட சி‌றுமிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் கெஜ்ரிவால் தெரிவி‌த்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா‌ காந்தியும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close