[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட ஆசிரியர்!

teacher-arrested-for-raping-student-in-j-k

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. ஏராளமான இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவாவில் 8வது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல் லப்பட்ட சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது அம்மாநிலத்தில் நடந்துள்ள மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்முவின் கிழக்குப் பகுதியில் உள்ள தோடாவை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் வாசிம் ஹூசைன் பட். இவர் சுகாதரப் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் மாணவியுடன் நெருங்கி பழகினார். திருமணம் செய்வதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். அதை புகைப்பட மாகவும் வீடியோவாகவும் எடுத்து வைத்திருந்தார். அதைக் காண்பித்து மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவிக்கு வேறு மாப்பிள்ளைப் பார்த்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவியுடன் தான் நெருக்கமாக இருக்கும் வீடி யோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார், ஆசிரியர். இதைப் பார்த்த அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது ஏன் என்று பெற்றோர் விசாரித்தபோது இத்தகவலை தெரிவித்துள்ளார் மாணவி. இதையடுத்து கிருஷ்வர் போலீசில் அவர்கள் புகார் கொடுத் தனர். போலீசார் ஆசிரியரை கைது விசாரித்தனர். அவர் இதே போல பல மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. 

அவரிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close