[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

சுவாதி, இந்துஜா, யமுனா, சித்ரா தேவி ! ஆண்களின் கொடூர தாக்குதலுக்கு பலியான பெண்கள்..!

crime-against-women

பெண்‌களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பல சம்பவங்கள் அண்மைக் காலங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பொது இடங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இங்கே தெரிந்து கொள்வோம்.

2016 ஜூன் 24 ஆம் தேதி

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கொடூரமான முறையில் வெட்டிக்கொலை‌ செய்யப்பட்டார். காலை நேரத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2016 ஜூலை 30

அதே ஆண்டு ஜூலை விழுப்புரம் அருகே நவீனா என்ற பள்ளி மாணவி காதலிக்க மறுத்ததற்காக செந்தில் என்பவர் எரித்துக்கொலை செய்தார். பள்ளி சிறுமி என்றும் பாராமல் இந்த கொடூர சம்பவம் அரங்கேற்றப்பட்டது.

2017 நவம்பர் 11 ஆம் தேதி

கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளிப்பருவத்தில் இருந்து நட்பாக பழகிய இந்துஜா என்ற இளம்பெண், திருமணம் செய்ய மறுத்ததால் அவரது வீடு புகுந்து குடும்பத்தினர் மீது ஆகாஷ் என்ற இளைஞர் பெட்ரோல் ‌ஊற்றி எரித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. இதில் இந்துஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்., அவரது தாய் ரேணுகாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

16. பிப்ரவரி 2018

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி சித்ராதேவியை, காதலிக்க மறுத்ததற்காக பாலமுருகன் என்ற இளைஞர் பள்ளி திரும்பும் வழியில் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்தார். 74 சதவித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சித்ராதேவி கடந்த பிப்ரவரி‌ 28 ஆம் தேதி உயிரிழந்தார்.

2018 பிப்ரவரி 13

காதல் விவகாரத்தில் நடந்த கொலைகள் ஒருபுறம் எனில், கடந்த பிப்ரவரி 13 ஆம்தேதி பெருங்குடி அருகே பணி முடித்து சென்று கொண்டிருந்த மென்பொறியாளர் லாவண்யா வழிப்பறி கொள்ளையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின்னர் வீடு திரும்பினார்.

2018 பிப்ரவரி 18

சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி யமுனா என்ற ஆய்வக உதவியாளரை, அந்த ஆய்வகத்தின் உரிமையாளர் ஆய்வக அமிலத்தை வீசி எரித்து தாக்குதல் நடத்தினார். சிகிச்சை பலனின்றி யமுனா உயிரிழந்தார்

2018 பிப்ரவரி 22

கடந்த பிப்ரவரி 22 ஆம்தேதி விழுப்புரம் அருகே வெள்ளம்புத்தூரில் 9 வயது சிறுவனை கொன்று அவனது தாய் ஆராயி மற்றும் 13 வயது மகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு இருவரும் இன்றுவரை உயிருக்குப் போராடிக்‌‌ கொண்டிருக்கின்றனர்.

2018 மார்ச் 09

சென்னை கேகே நகரில் கல்லூரி அருகே மதுரவாயலைச் சேர்ந்த அஸ்வினி என்ற முதலாமாண்டு‌ மாணவியை அழகேசன் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்திலே சாய்ந்த‌ அஸ்வினி ‌உயிரிழந்தார்.

20‌18‌ ஏப்ரல் 30

வேலூர் மாவட்டம் காட்பாடியில், திருமணம் செய்து கொள்ள மறுத்த‌ சுபத்ரா என்ற பெண்ணை சபீர் ‌என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சுபத்ராவை அவரே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்த சம்பவம் நடந்துள்ளது.

‌2018 ஏப்ரல் 30

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவியை விடுதி வாசலிலேயே இளைஞர்‌ ஒருவர் கத்தியால் கழுத்தை ‌அறுத்துள்ளார். நட்பாக பழகிய மாணவி கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்ததால் ஆத்திரமடைந்து நவீன் குமார் என்ற இளைஞர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close