[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்
  • BREAKING-NEWS வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS ராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

சாமியார் ஆசாராம் பத்தாயிரம் கோடிக்கு அதிபரானது எப்படி ?

asarambabu-asset-value

சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் ஆசாராம், பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியானவார். இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை தன்வசம் கொண்டிருக்கும் அவர், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாகியுள்ளார். அவர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் பெராணி கிராமத்தில் 1941 இல் பிறந்த ஆசாராமின் இயற்பெயர் அசுமால் ஹர்பலனி. வர்த்தகம் செய்யும் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த அவரது குடும்பம் 1947இல் அகமதாபாத்தில் குடியேறியது. அவர் 60-களில் லீலாஷா எனும் சாமியாரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார். அவர்தான் அசுமாலுக்கு ஆசாராம் என்று பெயர் சூட்டினார். 1972இல் தனது முதல் ஆசிரமத்தை அகமதாபாத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சபர்மதி நதிக்கரையில் அமைத்தார். குஜராத்தின் பிற நகரங்கள் வாயிலாக அவர் வேறு மாநிலங்களுக்கும் மெதுவாக விரிவடைய, ஆரம்பத்தில் ஏழைகள், பின்தங்கிய மற்றும் பழங்குடியின மக்களை கவர்ந்தார் ஆசாராம். 

குஜராத்தின் நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வர்க்க மக்களிடையேயும் பிரபலமாகத் தொடங்கியவர், மகனின் உதவியுடன் தனது ஆசிரமத்திற்கு உலகெங்கும் 400 கிளை‌களை நிறுவியுள்ளார் ஆசாராம். ஆசாராமிற்கு என இருந்த ஆதரவாளர்களைக் கவர முக்கிய அரசியல்வாதிகளும் அவரது ஆதரவாளர்களாக மாறினர். 2008இல் அவரது மடேரா ஆசிரமத்தில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதும் அவரது ஆசிரமத்திற்கு செல்வதை அரசியல்வாதிகள் தவிர்த்தனர். 2013இல் உத்தரப் பிரதேசம் சாஜகான்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அதை நிவர்த்தி செய்வதாகவும் கூறி, அந்த சிறுமியை ஆசாராம் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு முன்பு சிறுமியின் தந்தை தனது சொந்த செலவில் ஆசாராமிற்கு ஆசிரமம் ஒன்றைக் கட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close