[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

‘உன் சகோதரிக்கு இந்தக்கொடுமை தொடரும்’ வீடியோ அனுப்பிய கொடூரன்!

uttar-pradesh-man-hung-wife-to-ceiling-beat-her-victim-says-her-life-is-destroyed

மனைவியை கட்டித்தொங்கவிட்டு, 4 மணி நேரம் சித்ரவதை செய்த கணவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வரட்சனைக்காக கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு வாழும் ஒரு கொடூரன், தன் மனைவியிடம் பிறந்த வீட்டிற்கு சென்று ரூ.50,000 வரதட்சனை வாங்கி வருமாறு கூறி அடித்து துன்புறுத்தியுள்ளான். அவன் ஒரு கட்டத்தில் மனைவியின் கையை துப்பட்டாவின் ஒருமுனையால் கட்டி, மறுமுனையை வீட்டின் மேல் சுவரில் அதைக் கட்டித் தொங்கவிட்டுள்ளார். 

பின்னர் தனது பெல்ட்டால் மனைவியை அடித்துள்ளார். மனைவி வலி தாங்கமுடியாமல் துடித்தும், இறக்கமில்லாத அந்த கொடூரன் அடிப்பதை நிறுத்தவில்லை. மனைவி சுயநினைவை இழக்கும் வரை அடித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து, அந்தப் பெண்ணின் சகோதரருக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் வரதட்சனை பணத்தை கொடுக்கவில்லை என்றால், இந்த தாக்குதல் தொடரும் என்றும் மிரட்டியுள்ளார். இதையடுத்து பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தக் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தலைமறைவாக இருப்பதால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “நான் சுயநினைவை இழக்கும் வரை என்னை அடித்து துன்புறுத்தினார். பின்னர் நான் மயங்கிவிட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்தபோது, கைகள் கட்டப்பட்டு, தொங்கிக்கொண்டிருந்தேன்.” என்று கூறினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close