[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ஆசிரியை கழுத்தறுத்து கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை

school-teacher-murdered-in-ramanathapuram

ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியை ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம்  கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜா. இவரது மனைவி சண்முகப்ரியா ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டருகே கழுத்தறுத்த நிலையில் சண்முகப்ரியா சடலமாகக் கிடந்துள்ளார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சண்முகப்ரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

சண்முகப் பிரியா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி திருடப்பட்டுள்ளது. அவரது வீட்டின் துணி காயப்போடும் கயிறு சண்முகப்ரியா கழுத்தில் சுற்றப்பட்டிருந்தது. கொடூரமான முறையில் மனைவி வீட்டின் அருகிலேயே கொலை செய்யப்பட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் கணவர் மோகன் ராஜ் இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close