[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

வடமாநில ஏடிஎம் கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு 

atm-robbery-culprits-locked-in-jail

கோவையில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை அடித்த வட மாநிலத்தவர்கள் 8 பேர் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டனர். 

கடந்த 10 ஆம் தேதி கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் உள்ள இரு தனியார் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த வழக்கில் நாமக்கல், சேலம் பகுதிகளில் எட்டு பேர் பிடிபட்டனர். கைதான ராஜஸ்தானை சேர்ந்த மொசம்கான், சுபேர், முபாரக், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமித்குமார், சுபேர், அமீன், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்டாக், பீகாரை சேர்ந்த ஜீல்பிகர் ஆகிய 8 பேரை பத்துநாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். 

சேலம் ரயிலில் மேற்கூரையை துளையிட்டு பழைய பண நோட்டுகளை கொள்ளையடித்த வழக்குக்காக சிபிசிஐடி போலீசார், இவர்களிடம் விசாரணை நடத்தினர். தென்மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கர்நாடக, கேரள காவல்துறையினரும் இவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவர்களின் காவல் முடிந்ததையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close