[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஜன.27 இல் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஜன.24 ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்தும்-தமிழிசை
  • BREAKING-NEWS ஜன. 12 இல் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு நாளை மறுநாள் நடைபெறும்
  • BREAKING-NEWS 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா எழுதிய ‘தி 2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் டெல்லியில் வெளியீடு
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
குற்றம் 09 Dec, 2017 05:00 PM

குற்றவாளி தஷ்வந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்

child-hasini-muruder-case-3-day-police-custody-for-daswanth

சிறுமி ஹாசினி மற்றும் தனது தாயை கொலை செய்த வழக்கில் தப்பி கைதான தஷ்வந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் அளித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த ஆறு வயது குழந்தை ஹாசினியை கொன்ற கொலைக் குற்றவாளியான தஷ்வந்த் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். செலவுகளுக்கு பணம் தர மறுத்த தாய் சரளாவை கடந்த 2-ஆம்
தேதி அடித்துக் கொலை செய்த தஷ்வ்ந்த்,  வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளுடன்‌ தப்பிச் சென்றார். பின்னர் பெங்களூருவுக்கும் அதனைத்தொடர்ந்து மும்பைக்கும் சென்று தஷ்வந்த் தலைமறைவானார். 

இதையடுத்து மும்பை சென்ற தமிழக தனிப்படை போலீசார், செப்பூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கடந்த 6-ஆம்‌தேதி கைது செய்‌தனர். கைதான பின்னர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய தஷ்வந்த் அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

        

இதனையடுத்து, மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் தஷ்வந்த் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். தஷ்வந்திற்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். போலீஸ் காவல் முடிந்ததும் டிசம்பர் 12-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close