குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை சைதாப்பேட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நடிகர் ஜெய் கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி அதிகாலை குடிபோதையில் தனது சொகுசு காரை ஓட்டிச் சென்ற போது, அடையாறு அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானது. கார் மோதியதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டுதல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், நடிகர் ஜெய் விசாரணைக்கு ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. மேலும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நடிகர் ஜெய், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
விசாரணையின் போது, மதுபோதையில் கார் ஓட்டியதை நீதிபதி முன்பு ஜெய் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ததுடன் ரூ.5200 அபராதமும் விதிக்கப்பட்டது.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்