[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்; சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

உதவி செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை: கணவரின் நண்பர்களுக்கு வலை

woman-alleges-rape-by-husband-s-friends

உதவி செய்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த, கணவரின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மாவட்டம் பல்கார். இங்குள்ள, நல்லா சோபரா என்ற பகுதியில் வசித்துவருகிறார் 36 வயது பெண் ஒருவர். ஒரு வழக்கில் தண்டனை பெற்று இவரது கணவர் சிறையில் இருக்கிறார். கணவரை மீட்க உதவுகிறோம் என்று அந்த இளம் பெண்ணை, அடிக்கடி சிலர் சந்தித்துள்ளனர். கணவரின் நண்பர்களான அவர்களில் 2 பேர், கடந்த வெள்ளிக்கிழமை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளனர். வழக்கம் போல உதவி செய்வதாகக் கூறிய அவர்கள், பின்னர் அந்தப் பெண்ணை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்தப் பெண், துளிஞ்ச் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலியல் வன்கொடுமை செய்த அவர்களை தேடி வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close