[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டதால் கொலை: 3 பேர் கைது

the-loan-given-murder-3-people-arrested

நாமக்கல்லில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட முதலாளியை கொலை செய்த மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 16-ஆம் தேதி நல்லிகவுண்டம்புதூரில் விவசாய கிணற்றிலிருந்து ஒரு ஆணின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில், அது நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவ நிறுவன உரிமையாளர் விஜயகுமாரின் உடல் எனத் தெரியவந்தது. அவரைக் வெட்டிக் கொன்றுவிட்டு கிணற்றில் உடலை வீசியது விசாரணையில் ‌உறுதியானது.

அதனையடுத்து விஜயகுமாரின் நிறுவன மேலாளர் கார்த்திகேயனிடம் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், விஜயகுமாரிடம் இருந்து 2,75,000 ரூபாய் கார்த்திகேயன் கடன் வாங்கியதும், கொடுத்த கடனை விஜயகுமார் திருப்பி கேட்டதால், அவரை கார்த்திகேயன் நண்பர்களுடன் இணைந்து கொன்றதும் அம்பலமானது. இதனையடுத்து கார்த்திகேயன், அவரது நண்பர்கள் ஆனந்த், இளவரசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close