[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
  • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
  • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
  • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
  • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
  • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
  • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
  • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
குற்றம் 22 Aug, 2017 09:16 PM

தொடரும் சிறைவாசம்... நடிகர் திலீபின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

the-extension-of-actor-dileep-s-court

பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பிற்கு செப்டம்பர் 2ம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திலீப்பின் சிறைவாசம் தொடர்கிறது.

பிரபல நடிகை கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி காரில் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் ஜூலை 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது 120பி கூட்டு சதி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நடிகர் திலீப், கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரது ஜாமின் மனுவை ஜூலை 15ம் தேதி கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றமும், ஜூலை 24ம் தேதி கேரள உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.  திலீப்பின் காவல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது,

அந்த அவகாசம் இன்றோடு நிறைவடைந்த நிலையில்நடிகர் திலீப் கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் இருந்து மீண்டும் காணொலி காட்சி மூலம் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜரானார்.  திலீப் மற்றும் வழக்கு தொடர்பாக நிறைய சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதால், திலீப்பின் காவலை நீட்டிக்கக் கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரீமா ரியாஸ், திலீப்பின் சிறைக்காவலை வரும் செப்டம்பர் 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் நடிகர் திலீப் கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close