[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

சிறுமிகளை கடத்தி பாலியல் தொல்லை - 3 ஆட்டோ டிரைவர்கள் கைது

girls-rapped-by-auto-drivers-and-kept-as-sex-slaves

புதுச்சேரியில் வீட்டில் இருந்து கோபித்து கொண்டு வெளியே வந்த 4 சிறுமிகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆட்டோ டிரைவர்களை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

தலைமறைவாக இருக்கும் மற்ற ஆட்டோ டிரைவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு வம்பாகீரப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் 4 பெண்களை அடைத்து பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதாக குழந்தைகள் நல மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்து. இதன் பேரில், அவர்கள் ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் சோதனை நடத்திய போது 16 மற்றும் 17 வயதுடைய 4 சிறுமிகள் இருப்பதும், இதில் ஒரு சிறுமிக்கு ஒருவயது குழந்தை இருப்பதும் தெரியவந்தது. சிறுமி பாலியல் வழக்கு என்பதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தவளக்குப்பம் பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 4 சிறுமிகளிடமும் காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். 4 சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு தந்தது  15-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுனர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்ற ஆட்டோ டிரைவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close