[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று 10 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS இயக்குநர் ஐ.வி. சசி மரணத்தையொட்டி நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல்
 • BREAKING-NEWS தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் யாராலும் மிஞ்ச முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS 2 மாத கால பரோல் முடிந்து பிற்பகல் 3 மணிக்கு வேலூர் சிறைக்கு திரும்புகிறார் பேரறிவாளன்
 • BREAKING-NEWS ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை
 • BREAKING-NEWS கந்துவட்டிக் காரனை விட மோசமானவர்கள் அரசியல்வாதிகளும், பதவியில் இருப்பவர்களும்: சுசீந்திரன்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையில் சிக்கிய ஈரோடு நெசவுத் தொழிலாளியின் கிட்னியை எடுப்பது தடுத்து நிறுத்தம்
 • BREAKING-NEWS ஈரோட்டிலும் கந்து வட்டி கொடுமை: கிட்னி விற்க நிர்பந்தம்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் தமிழிசை உருவபொம்மையை எரிக்க முயன்ற போலீசார், விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு
 • BREAKING-NEWS பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஐ.வி.சசி காலமானார்
 • BREAKING-NEWS டிஜிட்டலுக்கு வாங்க: தயாரிப்பாளர்களுக்கு விஷால் அழைப்பு
 • BREAKING-NEWS புதுச்சேரி, காரைக்காலில் அரசு தொடக்கப்பள்ளிகளில் பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமை பற்றி 0424- 2260211 மற்றும் 7806917007 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்
 • BREAKING-NEWS ஆக்ரா- லக்னோ விரைவு சாலையில் போர் விமானங்களை தரையிறக்கம் செய்து சோதனை
குற்றம் 14 Jun, 2017 10:37 PM

சென்னையில் 24 மணிநேரத்தில் 5 பெண்களிடம் நகைபறிப்பு

in-24-hours-5-chain-snatching-incidents-happened-in-chennai

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பெண்களிடம் நகைபறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்களிடம் நகைகளை ‌பறித்த‌பைக் கொள்ளையர்கள் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

கண்களில் கவலையும், துயரம் தேய்ந்த குரலுமாக பேசும் ராஜேஸ்வரி, தனது 18 சவரன் தாலிச் சங்கிலியை பறி கொடுத்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவில்லை. திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது கணவருடன் பைக்கில் நேற்றிரவு வீடு திரும்பி கொண்டிருந்தபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் இந்த சம்பவம் நடந்தது. பைக்கில் வேகமாக வந்த 2 பேர், ராஜேஸ்வரி கழுத்தில் இருந்த தங்கத் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கொண்டு பூக்கடை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். 

இதேபோல,‌ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்மணி, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் நடந்து செல்லும்போது பைக்கில் வந்த இருவரிடம் தனது 4 சவரன் நகையை பறிகொடுத்தார். ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது கணவருடன் நேற்றிரவு தங்கசாலை, பழைய சிறைச்சாலை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அவரின் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றனர். அதேபோல, அடையாறில் சாலையில் நடந்து சென்ற கீதா என்பவரின் 6 சவரன் தங்கச்சங்கிலியை பைக்கில் வேகமாக வந்த இருவர் பறித்துச் சென்றனர். அம்பத்தூர் சிப்பட் சாலையில், சரஸ்வதி என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகையை பைக்கில் வந்த இருவர் பறித்துச்சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். பெரும்பாலும் துணையுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோதும், அச்சமின்றி வந்து பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close