[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கி கொலை செய்ய முயற்சி: இளைஞர் கைது

chennai-girl-student-attacked-an-attempt-to-kill-youth-arrested

காதலிக்க மறுத்த என்ஜினீயரிங் மாணவியை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக இளைஞர் ஒருவரை சென்னை குமரன்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேந்த என்ஜினீயரிங் மாணவி ஒருவர் கடந்த 5ம் தேதி மேற்கு மாம்பலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், மாணவியை சரமாரியாக தாக்கியதுடன், எட்டி உதைத்தார். இதில் மாணவி கீழே சுருண்டு விழுந்ததை பார்த்த பொதுமக்கள், இளைஞரை பிடிக்க முயன்றனர். உடனே அந்த இளைஞர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இனிடையே குமரன் நகர் போலீசில் கல்லூரி மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

அந்த புகாரில் யோபுராஜ் என்பவர் எனது மகளை காதலிப்பதாக கூறி தினமும் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் எனக்கும் தெரிய வந்ததும், நானும் அவரை கண்டித்தேன். இதேபோல் தொல்லைகொடுத்து, சண்டை போட்டு எனது மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரையடுத்து விசாரணை நடத்திய குமரன் நகர் போலீசார், போபுராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close