[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

‘தர்பார்’ காக்கிச்சட்டை கெட்அப்பில் மனைவி லதாவுடன் ரஜினி  - வைரலாகும் புகைப்படம்

superstar-rajinikanth-with-latha-rajinikanth-in-darbar-shooting-spot

‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினி உடன் அவரது மனைவி லதா இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்தத் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியது. 

                  

இந்நிலையில், ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினி உடன் அவரது மனைவி லதா இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில், போலீஸ் உடையில் ரஜினி நாற்காலியில் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். அவரது தோல்களில் கைகளை போட்டவாறு லதா நின்று கொண்டிருக்கிறார். இதற்குப் படப்பிடிப்பு தளங்களில் ரஜினியுடன் லதா இருக்கும் படங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

          

 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close