[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

’மனித கணினி’ சகுந்தலா தேவி பயோபிக்: வித்யா பாலன் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

vidya-balan-s-first-look-as-shakuntala-devi-out

கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கும் நடிகை வித்யா பாலனின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி. சிறுவயதில் குடும்ப சூழல் காரணமாக முறையான கல்வி பெறாத அவர், தானாகக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டார். தொடர் இலக்கங்களைக் கொண்ட சிக்கலான கணக்குகளுக்கு கூட சில நொடிகளில் மனக்கணக்கில் தீர்வுகாண்பதில் வல்லவர்.  பழைய நூற்றாண்டு ஒன்றின் தேதியை சொன்னால், மறுநொடியே அதன் கிழமையைச் சொல்லும் திறன் கொண்ட அவர், திறமைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர். 2013 ஆண்டு தனது 83 வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

உலகின் ’வேகமான மனிதக் கணினி' என்று அழைக்கப்படும் கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை கதை சினிமாவா கிறது. சகுந்தலா தேவியாக, நடிகை வித்யாபாலன் நடிக்கிறார்.  கேரளாவைச் சேர்ந்த அனுமேனன் இயக்குகிறார். ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார்.

இதில் வித்யா பாலனின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சகுந்தலா தேவியை போல முடியை, குட்டையாக வெட்டி தோன்றுகிறார் வித்யா பாலன். இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் விரைவில் தொடங்குகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close