[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தர்பார் அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு!

darbar-update-today-at-6pm

இன்று மாலை  6 மணிக்கு தர்பார் குறித்து அப்டேட் வெளியிட இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

சர்கார்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட போலீஸ் உடையில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் இன்று மாலை  6 மணிக்கு தர்பார் குறித்து அப்டேட் வெளியிட இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தர்பார் அப்டேட்டுக்காக  ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின்  அகலாதே பாடல் வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று தெரிவித்திருந்தார். இதனால் இன்று மாலை 6 மணிக்கு சமூக வலைதளங்களை ரஜினி, அஜித் ஆக்கிரமித்து இருப்பார்கள் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close