[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

“விரைவில் அரசியலுக்கு வருவேன்” - சத்யராஜ் மகள் பேட்டி

i-will-get-into-politic-soon-divya

நடிகர் சத்யராஜின் மகள் விரைவில் அரசியலில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


நடிகர் சத்யராஜூக்கு இரண்டு பிள்ளைகள். மகன் சிபிராஜ் திரைத்துறையில் நடித்து வருகிறார். அவரது மகள் திவ்யா சினிமா மீது விருப்பம் இல்லாமல் ஊட்டச்சத்து மருத்துவராக ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர், சினிமா துறையில் இல்லை என்றாலும் அடிக்கடி சமூகத்தில் நடக்கும் சில அநீதிகள் குறித்து கருத்துக்களை தெரிவித்து அனைவரின் கவனைத்தையும் ஈர்த்து வருகிறார். 

சில வருடங்கள் முன்பு இவர் தமிழ் அகதிகளுக்காக இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினார். இந்த மருத்துவ முகாம் நடந்து முடிந்த சில நாள்களிலேயே இவரை சில வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பு கொண்டதாகவும், அந்நிறுவனங்கள் தவறான சில மருந்துகளை முகாம்களில் பயன்படுத்துமாறும் அதற்காக அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் புகார் தெரிவித்தார்.  அதற்காக அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாக பகீரங்க குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து திவ்யா, கடந்த 2017 ஆண்டு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு முறையும் அதன் விளைவுகள் குறித்தும், அபாயகரமான மருந்துகள் நாட்டில் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவரிடம் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “எனக்கு எப்போதும் அரசியல் சம்பந்தமான புத்தகங்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால் நிஜமாக அரசியல் பக்கம் நான் சாய்ந்ததில்லை. 

ஆனால் இன்று நான் நம்புகிறேன். குறைந்த வருமானத்தில் உள்ளவர்களுக்கு சரியான உடல்நலத்தை வங்கவும் உதவி செய்யவும் ஒரு அமைப்பு தேவை. மருத்துவ உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு அதை கொடுக்காமல் மறுப்பது நியாயமற்றது. நமக்கு ஆரோக்கியமான ஒரு அமைப்புத் தேவை. தொடக்கத்தில் இருந்தே நான் ஒரு ஊட்டச்சத்து மருத்துவர். அது சார்ந்தே என் யோசனை உள்ளது.  

ஆனால் இங்கே வேறுவிதமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதை நான் உணர்கிறேன். இதனை சீர்செய்ய, தரத்தை உயர்த்த ஒரு அமைப்பு வேண்டும். நான் அந்த அமைப்பின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். ஆகவே நான் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close