[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர் கைது

stalker-holds-bhojpuri-actress-at-gunpoint-to-get-her-to-marry-him

நடிகையின் அறைக்குள் புகுந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி துப்பாக்கி முனையில் மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

பிரபல போஜ்புரி நடிகை ரிது சிங். இவர் இப்போது ’துலாரி பிடியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக, 70 பேர் கொண்ட குழு, மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்துக்கு சென்றுள்ளது. அங்குள்ள ராபர்ட்ஸ்கன்ச் நகரில் நட்சத்திர ஓட்டலில் குழுவினர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஓட்டலுக்கு வந்த இளைஞர் ஒருவர், நடிகை ரிது சிங்கின் அறை எங்கிருக்கிறது என்று தெரிந்துகொண்டார். பின்னர்  11 மணியளவில், யாருக்கும் தெரியாமல் எப்படியோ அறைக்குள் நுழைந்த அவர், துப்பாக்கியை காட்டி, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டியுள்ளார். 

இதை எதிர்பார்க்காத ரிது சிங் அலறினார். அவர் சத்தம் கேட்டு அங்கிருந்த அசோக் என்ற வாலிபர், அறைக்குள் ஓடி வந்தார். அவரை அந்த நபர், துப்பாக்கியால் சுட்டார். அசோக்கின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கீழே சாய்ந்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகையின் அறைக்கு ஓடி வந்தனர். இது தொடர்பாக போலீசுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்து கிடந்த அசோக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரிடம் அறையை விட்டு வெளியே வருமாறு கூறினர். ஆனால் அவர், போலீசாரை நோக்கியும் சுட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவர் நூலிழையில் தப்பினார். 

சுமார் ஒன்றரை நேர போராட்டத்துக்குப் பின், துப்பாக்கியால் சுட்ட இளைஞரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அருகி லுள்ள ஜான்பூரைச் சேர்ந்த பங்கஜ் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படப்பிடிப்பு குழுவினர் மும்பை திரும்பிவிட்டனர். நடிகை ரிது சிங், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close