[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

ஆக்‌ஷன் காமெடியில் மீண்டும் சந்தானம்

santhanam-in-kannan-s-action-comedy

ஆர்.கண்ணன் இயக்கும் ஆக்‌ஷன் காமெடி படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். 

’ஜெயம்கொண்டான்’, ’கண்டேன் காதலை’, 'வந்தான் வென்றான்'’, ‘சேட்டை’, ’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘இவன் தந்திரன்’, ''பூமராங்’ ஆகிய படங்களை இயக்கியவர் ஆர். கண்ணன். இவர் அடுத்து இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். 

இதுபற்றி இயக்குனர் ஆர்.கண்ணன் கூறும்போது, ‘’ நான் இயக்கிய, ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை படங்களில் சந்தானம் நடித்திருக்கிறார். அவருடன் மீண்டும் இணைவது சிறப்பானது. ’கண்டேன் காதலை’ படத்தில் மொக்க ராசு என்ற கேரக்டரில் சந்தானம் நடித்திருப்பார். அது போன்ற ஒரு கேரக்டர் படம் முழுவதும் இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து உருவாக்கப்பட்ட கதை இது. சந்தானத்திடம் கதை சொன்னபோது சிரித்து சிரித்து கண்ணீர் விட்டார். 

ஆக்‌ஷன் காமெடி படமான இதை எனது மசாலா பிக்ஸ் நிறுவனம் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் முடிவாகவில்லை. இன்னும் இரண்டு மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது’’ என்றார்.

ஏற்கனவே சில ஆக்‌ஷன் காமெடி படங்களில் நடித்துள்ள சந்தானம், இந்த ஆக்‌ஷன் காமெடி படத்திலும் நடிக்கிறார். 

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close