[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஹாரர் காமெடியுடன் தமிழுக்கு மீண்டும் வருகிறார் விநயன்!

vinayan-revealed-horror-film-aakasha-ganga-2

ஹாரர் காமெடி படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார் இயக்குனர் விநயன்

தமிழில், விக்ரம் நடித்த 'காசி', ஜெயசூர்யா, காவ்யா மாதவன் நடித்த ’என் மனவானில்’ அற்புதத்தீவு, டிராகுலா உட்பட சில படங்களை இயக்கிய வர் மலையாள இயக்குனர் விநயன். மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இவர், மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணி யின் வாழ்க்கை கதையை ‘சாலாக்குடிக்காரன் சங்கதி’ என்ற பெயர் இயக்கியிருந்தார். இந்தப்படம் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டானது. 

இந் நிலையில் தற்போது அதிரடியான ஹாரர் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் வருகிறார் இயக்குநர் விநயன். மலையாளம், தமிழ் மொழிகளில் உருவாகும் இந்தப் படம், விநயன் இயக்கி ஹிட்டான ‘ஆகாசகங்கா’ என்ற மலையாளப் படத்தின் இரண்டாம் பாகம். 

இதில் ஆசிப் அலி, சித்திக், சலீம்குமார், ஸ்ரீநாத் பாஷி, விஷ்ணு கோவிந்த், ஹரீஷ் கணரன், தர்மாஜன், ஆரதி உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிஜிபால் இசையமைக்கிறார். பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஷூட்டிங்  தொடங்கி நடந்து வருகிறது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close