[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

“நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை” - வைரமுத்து 

vairamuthu-cast-their-vote

ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை எனப் பாடலாசியர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

தமிழகத்தில் இன்று காலை 7 முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர். மேலும் வாக்களித்த பின்னர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். 

தனது வாக்கினை பதிவு செய்த பாடலாசிரியர் வைரமுத்து, ''ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்'' என  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close