[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

மே 31-ல் வெளியாகிறதா விக்ரமின் "கடாரம் கொண்டான்" ?

actor-vikram-s-kadaram-kondan-likely-to-be-released-on-may-31

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் மே31 ஆம் தேதி திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தை ‘தூங்காவனம்’ திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார். இதில் நாசரின் மகன் அபிஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். 

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படம் எப்போது வெளியாகுமென ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் படம் வெளியீட்டிற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், மே 31ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘சாமி ஸ்கொயர்‘. இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டு தேதியும் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close