[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

''விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவின் பின்னணி குரல்: ஏ.ஆர்.ரகுமானின் ஆந்தம்' - எதிர்பார்ப்பில்  'அவென்ஜர்ஸ்: என்ட் கேம்' 

ar-rahman-on-composing-tamil-anthem-for-avengers

வரும்26 ஆம் தேதி வெளியாக உள்ள 'அவென்ஜர்ஸ்: என்ட் கேம்' திரைப்படத்தின் 'மார்வெல் ஆந்தம்' என்ற பாடல் தமிழில் வெளியிடப்பட்டது. 

மார்வெலுக்கு என உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 'அவென்ஜர்ஸ்: என்ட் கேம்' வரும் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘மார்வெல் ஆந்தம்' ரிலீஸ் செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இந்தியில் ஆந்தம் பாடல் வெளியானது. இந்நிலையில் 'அவென்ஜர்ஸ்: என்ட் கேம்' திரைப்படத்தின் 'மார்வெல் ஆந்தம்' தமிழிலும் வெளியிடப்பட்டது. 

சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆன்ட்ரியா, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்வெல் ஆந்தம்' பாடலுக்கு இசையமைத்து பற்றி ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துகொண்டார். 

இந்தப் படத்தின் தமிழ்பதிப்பில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ரியா உள்ளிட்டோர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்ட்ரியா மற்றும் அயன் மேன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி தமிழில் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். 

அவெஞ்சர்ஸ் படத்தின் 3 பாகங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களை வசப்படுத்திய நிலையில்  'அவென்ஜர்ஸ்: என்ட் கேம்’ திரைப்படத்துக்கு எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

வீடியோ: 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close