[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

வெங்கட் பிரபு - அஜித் சந்திப்பு : உறுதியானதா மங்காத்தா 2? 

ajith-and-director-venkat-prabhu-to-join-hands

சமீப நாட்களாக மங்காத்தா 2 குறித்த செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் அஜித்துடன் சந்தித்த புகைப்படத்தை  வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்

நடிகர் அஜித்தின் 50வது படமான மங்காத்தா பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய திரைப்படம். போலீஸ் அதிகாரியில் தொடங்கி நெகட்டிவ் ரோலில் முடித்திருப்பார் அஜித். இந்த படத்தை அஜித் ரசிகர்களுக்கு ஏற்பவும், சினிமா ரசிகர்களுக்கும் ஏற்பவும் நேர்த்தியா இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி இருப்பார். யுவனின் இசை, அர்ஜூன், த்ரிஷா, ஆண்ட்ரியா ஆகியோரின் நடிப்பு என பக்கா மாஸாக மங்காத்தா ஹிட் அடித்தது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் மங்கத்தா 2. 

மங்காத்தா 2 குறித்து அவ்வப்போது வெங்கட்பிரபுவிடம் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்ப, அவரும் விரைவில் என்று பதில் அளித்து வந்தார். இந்நிலையில் மங்காத்தா 2 க்கான வேலைகள் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. சமீப நாட்களாக மங்காத்தா 2 குறித்த செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் நேற்று அஜித்துடன் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

நிச்சயம் இந்த சந்திப்பு மங்காத்தா 2 தொடர்பான ஆலோசனைக்கானது என்றும் படம் உறுதியாகிவிட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித் தரப்போ, வெங்கட் பிரபு தரப்போ இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படம் மட்டும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

தற்போது வினோத் இயக்கத்தில்  பிங்க் தமிழ் ரீமேக்கான பெயரிடப்படாத படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தை போனீ கபூர் தயாரித்து வருகிறார். அந்த படத்துக்கு பின்னர் போனி கபூர் தயாரிப்பில் மற்றொரு திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வெங்கர் பிரபு இயக்கத்தில் அஜித் அவரது 61வது திரைப்படத்தில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close