[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

ரஜினி - கமல் கூட்டணி வைக்க வேண்டும் : விருப்பம் தெரிவித்த விஷால்

i-wish-rajini-sir-and-kamal-sir-come-together-says-vishal

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அமைதி காத்த கமல், தங்கள் கைகள் கரை படிந்து விடக்கூடாது என்றும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்தார். 

இதற்கிடையே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தங்களது இலக்கு என்றும் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் பேசிய கமல்ஹாசன், “ ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன், ஆனால் ஆதரவு என்பது கேட்டு பெறவேண்டிய விஷயம் அல்ல. அவர்களே கொடுக்கவேண்டும். இப்போது வரை தனித்து போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவாக உள்ளது” என்று தெரிவித்தார். 

இந்தச்சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த கமல், “நன்றி என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை  நின்றால் நாற்பது எளிதே  நாளை நமதே” என்று சூசகமாக ஆதரவு கோரினார். 

தொடர்ந்து ரஜினிக்கு கமல் கூட்டணி அழைப்பு கொடுத்துவரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சேர்ந்து வர வேண்டும். இது  நடிகர் சங்க விழாவுக்கோ, எந்த நடிகரின் வரவேற்புக்கோ, வேறு எதற்குமே அல்ல. அவர்கள் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு சேர்ந்து வர வேண்டும். அது மாற்றத்தை கொண்டுவரும் நடவடிக்கையாக அமையும்'' எனவும் விஷால் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close