[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

’அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் துருவ் ஜோடியாக புதிய ஹீரோயின்!

banita-sandhu-is-the-new-heroine-in-arjun-reddy-remake

’அர்ஜூன் ரெட்டி’ படத்தின் புதிய ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக, இந்தி பட ஹீரோயின் நடிக்கிறார்.

தெலுங்கில் விஜய தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’அர்ஜுன் ரெட்டி’. இதை தமிழில் ரீமேக் செய்தனர். விக் ரம் மகன் துருவ் ஹீரோவாகவும் கொல்கததா மாடல் மேகா சவுத்ரி ஹீரோயினாகவும் நடித்தனர். ’வர்மா’ என்று டைட்டில் வைக்கப்பட்ட இந் தப் படத்தை பாலா இயக்கினர். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் முகேஷ் ரதிலால் மேத்தா தயாரித்தார்.

படம் முடிந்து இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் படம் திருப்திகரமாக இல்லாததால் கைவிடுவதாகவும் வேறு குழுவை வைத்து மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்தது. ஆனால், துருவ்தான் ஹீரோ வாக நடிப்பார் என்றும் தெரிவித்திருந்தது. இது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இயக்குனர் பாலா, படைப்பு சுதந்திரம் கருதியே ’வர்மா’ படத்தில் இருந்து தான் விலகியதாக தெரிவித்தார். துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இது குறித்து மேலும் பேச விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில் வேறு இயக்குனரை வைத்து இந்தப் படத்தை இயக்க உள்ளனர். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், தெலுங்கு ’அர்ஜூன் ரெட்டி’ யை இயக்கிய சந்தீப் வங்காவின் உதவியாளர் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்குவதாகக் கூறப்படு கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

இதற்கிடையே, துருவ் ஜோடியாக நடிக்க, பனிதா சாந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர், இந்தியில் வருண் தாவன் ஜோடியாக ’அக்டோபர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்துவருகிறது. ஜூன் மாதம் படத்தை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close