[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

காதலர் தினப் பரிசாக சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர் நாளை ரிலீஸ்

ngk-film-teaser-to-be-released-tomorrow

‘என்ஜிகே’ படத்திற்கு தணிக்கைக்குழு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது எனப் படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம்‘என்ஜிகே’. அதாவது‘நந்த கோபால குமரன்’ சுருக்கம்தான் இது. இதனை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் நாயகனாக சூர்யா நடித்துள்ளார். மேலும் நாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ளனர். படத்தில் மன்சூர் அலிகான், பாலாசிங் எனப் பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு கூறியிருந்தது. ஆனால் படப்பிடிப்பின் போது இயக்குநரின் உடல்நிலை மோசமானதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. அவரது உடல்நிலை இயல்புக்கு திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இதற்காக ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் மன்னிப்பு கூறியிருந்தார்.

இப்போது ‘என்ஜிகே’வின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதால், சூர்யா தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்து கொடுத்துவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் காதலர் தினமான நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. 

மேலும் கார்த்தி நடிப்பில் நாளை வெளியாக உள்ள ‘தேவ்’ திரைப்படத்துடன் ‘என்ஜிகே’  படத்தின் டீசரை அனைத்து திரையரங்களிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ‘என்ஜிகே’ படத்திற்கு தணிக்கைக் குழு ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளது.  இதை சூர்யாவின் ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் #NGKTeaser celebration -    ஹேஷ்டேக் போட்டு  இந்திய அளவில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close