[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

முன்னாள் ஹீரோயின் சொத்துக்களை அபகரித்தேனா? நடிகர் சரத்பாபு பரபரப்பு விளக்கம்!

sarath-babu-responds-on-rama-prabha-s-allegation

தன்னை ஏமாற்றி தன் சொத்துக்களை அபகரித்துவிட்டதாக முன்னாள் ஹீரோயின் ரமா பிரபா கூறிய குற்றச்சாட்டுக்கு நடிகர் சரத்பாபு விளக்கம் அளித்துள்ளார். 

தமிழில், நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, அண்ணாமலை உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் சரத்பாபு. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் நடித்துள் ளார். ரஜினி, கமல் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சரத்பாபு, பிரபல வில்லன் நடிகர் நம்பியாரின் மகள் சினேகா வை 1990-ல் திருமணம் செய்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் 80-களில் சரத் பாபுவுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர், முன்னாள் ஹீரோயின் ரமா பிரபா. இவர், தமிழில், அன்புக்கு நான் அடிமை, 47 நாட்கள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சுந்தர்.சி இயக்கிய ’கல கலப்பு 2’ படத்தில் பாட்டியாக நடித்திருந்தார். 

தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், சரத்பாபு மீது சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். அதி ல், நானும் சரத்பாபுவும் 80-களில் ஒன்றாக வாழ்ந்தோம். 1988 ஆம் ஆண்டில் அவரை பிரிந்தேன். அப்போது என்னை ஏமாற்றி என் சொத்துக்களை அபகரித்துவிட்டார். சென்னையில் இருந்த எனது வீட்டையும் அவர் பறித்துவிட்டார்’’ என்று கூறியிருந் தார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சரத்பாபு கூறும்போது, ‘’ தமிழ் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் மகள் சினேகாவை, 1990-ல் திருமணம் செய்தேன். அதுதான் என் முதல் திருமணம். நானும் நடிகை ரமா பிரபாவும் அதற்கு முன்பு சேர்ந்து வாழ்ந்தோம். அந்த உறவுக்கு பெயர் இல்லை. தெலுங்கு மீடியா குறிப்பிடுவதை போல அவர் என் முதல் மனைவி இல்லை. நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. நான், பிறக்கும்போதே வசதியாக பிறந்தவன். அதனால் மற்றவர்கள் சொத்துகளை பறிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 

நான் ஹீரோவாக, சினிமாவில் அறிமுகமானவன். 40 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். கே.பாலசந்தர் என்னை அறிமுகப் படுத்தினார். நான் ரமா பிரபாவை சந்திக்கும் முன்பே ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தேன். 

இப்போது சுமார் ரூ.60 கோடி மதிப்புக் கொண்ட, எனது விவசாய நிலத்தை அப்போது விற்று, சென்னை உமாபதி தெருவில், ஒரு வீடு வாங்கினேன். அதன் புனரமைப்பு பணிக்கு ரூ.1-ல் இருந்து ரூ.2 லட்சம் வரை செலவு செய்தேன். பின் அதில் வசித் துக் கொள்ளுமாறு ரமா பிரபாவிடம் கொடுத்தேன். பிறகு எனது அந்த வீட்டை, திருப்பி வாங்கிக்கொண்டேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்? உண்மை இப்படியிருக்க, ரமா பிரபா இப்போது எனது பெயரை கெடுக்கும் நோக்கில் பல குற்றச்சாட்டு களைக் கூறியிருக்கிறார். இத்தனை வருட சினிமா வாழ்வில் என்னை யாரும் தவறாகப் பேசியதில்லை. என் நிலைமையை தெளிவுபடுத்தவே இதை தெரியபடுத்துகிறேன்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close