[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

எம்ஜிஆரின் பேரன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் : குறவர்கள் சங்கம் மனு 

the-film

எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் நடித்து வரும் "குறவன்" படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறவர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கபட்டுள்ளது.

எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் நடித்து வரும் படம் "குறவன்". இப்படத்தை கீரா தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறவர்கள் சங்கம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கபட்டுள்ளது. அந்த புகார் மனுவில், “குறவர்கள் என்றால் குறிஞ்சி நிலத்தில் வாழும் தமிழர்கள். அவர்களைத்தான் குறவன் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காப்பியங்கள், புராணங்களில் குறிஞ்சி நல குன்றவன் வேட்டுவன், வேடர் என பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் இனம் சார்ந்த பலர் அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பல முறை எங்கள் இனம், சாதி, பெருமை குறித்து பல மனுக்கள் அளித்துள்ளோம்.

 மேலும் குஜராத், மகாராட்டிராவில் இருந்து தமிழகத்திற்கு வந்த மராத்தி மொழி பேசியும் எழுதும் ‘வாக்கிரிவாலா’ இனம் சாதியை சேர்ந்த இவர்கள் தமிழக சாதி பட்டியலில் குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எங்கள் இனத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ‘குறவன்’ என்ற பெயரில் தயாரிப்பாளர் கீரா என்பவர் சினிமா படம் தயாரித்து வருகிறார். பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி தலைமையில் நடந்த படத்தின் பெயர் வெளியீட்டு விழாவின் வீடியோ காட்சிகள் வெளியாயின. இதனைக்கண்டு தமிழகத்தில் வாழும் சுமார் 1 கோடியே 40 லட்சம் குறவர்கள் அதிர்ச்சியடைந்தோம்.


இந்தப்படம் வெளிவந்தால் எங்கள் இனத்துக்கே பெரும் இழுக்கு ஏற்படும் என அஞ்சுகிறோம். எனவே படக்குழுவினர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் ‘ஊசி, பாசி விற்பவர்கள் குருவி சுடுபவர்கள் குறவர்கள் அல்ல. குறிஞ்சி நிலத்தில் வாழும் சுத்தமான தமிழர்கள் நாங்கள். எங்கள் இனத்தை சேர்ந்த எத்தனையோ பேர் இன்று நாடு முழுவதும் உயர்ந்த அரசாங்க பதவிகளில் உள்ளனர் என்றும் அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close