[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

'எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது' - காதலனை கரம்பிடிக்கும் நடிகை ரிச்சா

str-and-dhanush-s-heroine-richa-gangopadhyay-engaged

தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக நடிகை ரிச்சா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் ரிச்சா. மயக்கம் என்ன திரைப்படத்தில் ரிச்சா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்பு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. 2013ம் ஆண்டுக்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கிய ரிச்சா, அமெரிக்காவுக்கு படிக்கச்சென்றார். 

இந்நிலையில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், எனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 2 வருடங்களுக்கு முன்பு  ஜோவும் நானும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டோம். திருமண தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தைக் காண காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வளர்ந்த ரிச்சா, கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close