[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ஜனவரியில் தொடங்குகிறது ‘தளபதி 63’ படப்பிடிப்பு?

vijay-atlee-s-third-outing-to-soon-go-on-floor

‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 21 அல்லது 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி63’. வழக்கம் போல் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்தப் படத்தினை அட்லி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை விஜய்யை வைத்து இயக்கி உள்ளார். 

தளபதி 63 படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். கடைசியாக 2009ல் வெளியான ‘வில்லு’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் ‘தளபதி63’ இவர்களின் 2 வது திரைப்படமாக அமைந்துள்ளது.

மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் ‘தளபதி63’ ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும் எனவும் இதுவரை விஜய் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இப்படம் இருக்கும் எனவும் ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

இதையடுத்து புரடெக்‌ஷன் டிசைனர் முத்துராஜ், கடந்த நவம்பர் மாதம் அவரது ட்விட்டரில் ‘விஜயின்‘தளபதி63’ படத்தின் செட் வேலைகள் தொடங்கிவிட்டதாக’ தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். தீபாவளி அன்று வெளியாக உள்ள விஜயின் ‘தளபதி63’ படத்திற்கான செட் வேலைகள் சென்னை பெரம்பூரிலுள்ள பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 21 அல்லது 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close