[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

சர்வதேச விருதை பெற்றார் நடிகர் விஜய் : குவியும் வாழ்த்துகள்

actor-vijay-got-2018-best-international-actor-award-in-london

ஐயெராவின் சர்வதேச சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் விஜய் அதற்கான விருதை பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் ஐயெரா (IARA) விருதுகள் எனப்படும் சர்வதேச விருதுகள் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் எனும் இரண்டு விருதுகளுக்கு தமிழக முன்னணி நடிகர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரைக்கப்பட்டார். அவருடன் சர்வதேச நடிகர்கள் சிலரது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மெர்சல் படத்தில் விஜய்யின் மூன்று வேட நடிப்பிற்காக இந்த பரிந்துரை நடைபெற்றிருந்தது.

பரிந்துரை செய்யப்பட்டுள்ள நடிகர்களின் பெயர்களுக்கு, பொதுமக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மெர்சல்’ திரைப்படம் ஏற்கெனவே சிறந்த வெளிநாட்டு மொழித்திரைப்படம் என்ற இங்கிலாந்து விருதை முன்னதாக வென்றிருந்தது. அந்த நிலையில் தான் விஜய் சிறந்த நடிகராக பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். 

பின்னர் ஐயெரா (IARA) விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 22ம் தேதி லண்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் சிறந்த நடிகராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளங்களில் பெரும்படையாக உள்ள அவரது ரசிகர்கள் தான் என்று அனைவராலும் கூறப்பட்டது. அவர்கள் அளித்த பெருவாரியான வாக்கின் மூலமே விஜய்க்கு அந்த வெற்றி கிடைத்ததாகவும் சினிமா நிபுணர்கள் கூறியிருந்தனர். 

இந்நிலையில் ஐயெரா விருது வென்ற சினிமா பிரபலங்களுக்கு விருதை வழங்கும் விழா நேற்று லண்டனில் நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் நடிகர் விஜயும் பங்கேற்றார். அத்துடன் சர்வதேச சிறந்த நடிகருக்கான விருதையும் அவர் பெற்றுக்கொண்டார். அந்தப் புகைப்படங்களையே தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அத்துடன் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close