[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

உலகம் முழுவதும் 4 நாளில் 400 கோடி வசூல்....!

the-indian-film-2-0-has-collected-around-rs-400-cr

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘2.0’ திரைப்படம் நான்கு நாளில் 400 கோடி வசூல் செய்துள்ளது என்று அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளோடு கடந்த 29 ஆம் தேதி வெளியானது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

Image result for 2.0

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவ்வளவு பொருட்செலவுடன் தயாராகும் படத்தின் வசூல் என்பது, இந்திய சினிமா மார்க்கெட்டை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கும் என பேசப்பட்டது. அதை வைத்தே பல நிறுவனங்கள் மேலும் பணத்தை முதலீடு செய்ய முன்வருவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்தப் படம் இந்திய மதிப்பில் 500 கோடி பட்ஜெட் எனக் கணக்கிடப்பட்டது. இந்திய அளவில் மட்டும் ‘2.0’ முதல் நாள் 100 கோடி வசூல் செய்யலாம் எனக் கூறப்பட்டது. 

Image result for 2.0

இந்நிலையில் 2.0 திரைப்படம் உலக அளவில் நான்கு நாளில் 400 கோடி வசூல் செய்துள்ளது. இதனை 2.0 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா சமூக வலைதளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளது.  இதனிடையே 2.0 திரைப்படம் இந்திய அளவில் முதல் நாளில் 73.5 கோடியை மட்டுமே வசூல் செய்தது. வட இந்தியாவில் 21 கோடி, தமிழ்நாட்டில் 20 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 19 கோடி, கேரளாவில் 5.5 கோடி மற்றும் கர்நாடகாவில் 8 கோடி வசூலித்துள்ளது.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close