பிரபல தாதா சோட்டா ஷகீலின் ஆள் என்று கூறி சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
இந்தி நடிகர் சல்மான் கானிடம் உதவியாளராக பணியாற்றுபவர் நிபாஸ் சாயா. இவரது தொலைபேசிக்கு எண்ணுக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்தது. எடுத்து பேசினார். எதிர்முனையில் பேசியவர், தான் சல்மான்கானிடம் முக்கியமான விஷயம் தொடர்பாக பேச விரும்புவதாகவும் அவரது செல்போன் நம்பர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
உதவியாளர் மறுத்து, போனை துண்டித்துவிட்டார். அந்த நபர் தொடர்ந்து சாயாவுக்கு போன் செய்து சல்மான் கான் நம்பரை கேட்டு நச்சரித்துள் ளார்.
மறுத்த உதவியாளரை கண்டபடி திட்டியுள்ளார். பின்னர் சல்மானை சந்திக்கவிடவில்லை என்றால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் எப்படியோ, சல்மான் கானின் தந்தை சலீம் கானின் எண்ணை பெற்ற அந்த நபர், அவருக்கும் போன் செய்து, சல்மான் கான் எண்ணை கேட்டுள்ளார். அவர் மறுத்ததால், அவரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
தான் பிரபல தாதா சோட்டா ஷகீலின் ஆள் என்றும் முக்கியமான விஷயமாக அவரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி டார்ச்சர் செய்ததால் பாந்த்ரா போலீசில் சல்மான் கான் உதவியாளர் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், அந்த நபர் அலகாபாத்தில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் அமுக்கினர். அவர் பெயர் நபி என்ற ஷேரா (24) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், எதற்காக சல்மான் கானை தொடர்பு கொள்ள முயன்றார். சோட்டா ஷகீல் பெயரை ஏன் பயன்படுத்தினார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிரட்டிய விராட் கோலி - இந்திய அணி அபார வெற்றி
'ராமருக்கு கோயில் கட்டும் வேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள்' காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு
ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு
“நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்” - வெளியுறுவுத்துறை அமைச்சகம்
“எங்களது துப்பாக்கியையே எடுத்து மிரட்டினர்” - என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் விளக்கம்