[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

18 கிமீ பின்தொடர்ந்த ரசிகர்! காரை நிறுத்தி அறிவுரை கூறிய அஜித்

ajith-advise-to-his-fans

அஜித் ரசிகர்களால் தினமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்படும் விஸ்வாசம், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்கள் பார்த்துக்கொண்டார்கள். விஸ்வாசம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒரு செய்தியை தேடிப்பிடித்து பரபரப்பாக்கி வந்தனர். 

மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகளை, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வைத்து படமாக்கப்பட்டது. இதனையடுத்து அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் முழுவதையும் முடித்து கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது. பிறகு நயன்தாரா பகுதியும் காட்சியாக்கப்பட்டன. 

இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக இப்படத்தின் தாயரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்தது. சமீபத்தில் படத்திற்காக தான் வைத்திருந்த தாடி மீசையை எடுத்து தன் பழைய கெட்டப்புக்குமாறிய அஜித்தின் புகைப்படம் வைரலாக பரவியது. விமான நிலையத்தில் பலர் அஜித்துடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் அஜித்தின் காரை 18 கிமீ துரத்திச்சென்று அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். 

அது குறித்து அந்த ரசிகரே தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ''சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன். கூட்ட நெரிசலில் கூட தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை தல அவர்களின் காரை 18 கிமீ பின் தொடர்ந்தோம். சற்று தொலைவில் கார் நிறுத்தப்பட்டு டிரைவர் இறங்கி வந்தார். தல என்னை அழைத்தார். தம்பி உன் பெயர் என்ன என்றார். கணேஷ் என்றேன். கணேஷ் தம்பி, இதுமாதிரி பின் தொடர்ந்து வந்து விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும், இது தவறு என்றார் தல. நான் மன்னிப்பு கேட்டேன். அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தார். போட்டோ எடுத்தபின் விஸ்வாசம் கண்டிப்பா வெற்றிபெறும் என்று கூறினேன். அவர் பதிலுக்கு நன்றி கூறினார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close