[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

நடிகை சுஷ்மிதா சென் - மாடல் ரோஷன் ஷால் திருமணம் எப்போது?

sushmita-sen-and-rohman-shawl-to-tie-the-knot-next-year

தன்னை விட 16 வயது குறைந்த காதலருடன் நடிகை சுஷ்மிதா சென் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக ’ரட்சகன்’ படத்தில் நடித்திருந்தார். பிறகு ‘முதல்வன்’ படத்தில் ‘சக்கலக்க பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன் முதலாக பிரபஞ்ச அழகி படத்தை வென்றவர். 

(மகள்கள் மற்றும் காதலருடன் தீபாவளி கொண்டாடிய சுஷ்மிதா)

அவருக்கு இப்போது 42 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதா, சில சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். நட்சத்திர ஓட்டல் அதிபர் ஒருவருடன் அவருக்கு காதல் மலர்ந்து அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் சுஷ்மிதா சென் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரோமன் ஷால் (Rohman Shawl) என்ற 27 வயது மாடலை காதலித்து வருகிறார். முதலில் கிசு கிசுவாக பரவிய இந்த தகவலை பின்னர் சுஷ்மிதாவே உறுதிப்படுத்தினார். இருவரும் தாஜ்மஹாலுக்கு ஜோடியாக சென்று எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி இருந்தார். படத்தின் கீழே, எனது வாழ்க்கையின் காதல் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவருக்கும் ரோமனுக்கும் 16 வயது வித்தியாசம் இருந்தாலும் இவர்கள், இப்போது திருமணத்துக்கு தயாராகி விட்டனர். இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி மும்பை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சுஷ்மிதாவிடன் கேட்டுள்ளார் ரோமன். சுஷ்மிதாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கு அவரது வளர்ப்பு மகள்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close