[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்

ரீமேக் படங்களில் நடிப்பது சவால்: ஜோதிகா!

acting-in-remake-films-are-always-a-huge-challenge-jyotika

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, தேஜஸ், எம்.எஸ்.பாஸ்கர் உட்படபலர் நடித்துள்ள படம், ’காற்றின் மொழி’. இது வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட்டான ’துமாரி சுலு’ படத்தின் ரீமேக். பாஃப்டா மீடியா வொர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் உறவினர் ஏ.ஹெச். காஷிப் இசை அமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. 

இதில் நடிகை ஜோதிகா பேசும்போது, ‘ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். இதன் ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை. கதையோடு பயணித்து நடித்துள்ளேன். ஆனால் இந்தப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதா மோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே, இந்த படத்தின் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. 

இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பை வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார். விதார்த் எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மனோ பாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்தது. குமரவேல் இயல்பாக நடிப்பார். தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள். ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி பார்த்ததே இல்லை. 

என் அம்மாவையும், நான் அம்மாவாக அழைக்கும் என் மாமியாரையும் தான் நான் மாதிரியாக கருதுவேன். என் மாமா சிவகுமார் என் எல்லா படங்களையும் திரை அரங்கத்திற்கு சென்று தான் பார்ப்பார். நான் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு பிடிக்கும். இந்தப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது . சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக் கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது’ என்றார்.

இயக்குநர் ராதாமோகன், லட்சுமி மஞ்சு, விதார்த், தயாரிப்பாளர் தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close