[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

சண்டக்கோழி 2 – ஒரு திரைப் பார்வை

review-of-sandakozhi-2

சண்டக்கோழியில் ஜெயித்த சேவலையே மீண்டும் பந்தயத்தில் இறக்கிவிட்டு ஜெயிக்க வைக்கும் விசால், லிங்குசாமியின் முயற்சியே ‘சண்டக்கோழி-2’.

ஊர்த் திருவிழாவில் ஏற்படும் கலவரத்தால் வரலட்சுமியின் கணவன் கொலை செய்யப்பட, அதே திருவிழாவில் பழிதீர்க்க ஒட்டுமொத்த வரலட்சுமி அண்ட் கோவும் காத்திருக்கிறார்கள். அதனால் 7 ஆண்டுகளாக 
நடைபெறாமல் இருந்த திருவிழா ராஜ்கிரண் முயற்சியால் மீண்டும் நடக்கிறது. அப்போது, பழி தீர்க்கப்பட்டதா, திருவிழா நடந்து முடிந்ததா என்பதை கலர்ஃபுல்லான காட்சிகளுடன், பார்த்து பழகிய திரைக்கதையுடனும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

2005-ல் விறுவிறுப்பான திரைக்கதை, விஷால் ஆக்‌ஷன், மீரா ஜாஸ்மின் காதல் என எல்லோரையும் ரசிக்க வைத்த 
‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அதைவிட வலுவான ஒரு கதைக்களத்தை படக்குழுவினரால் யோசிக்க முடியவில்லை போல. அதனால், ஒரு திருவிழாவிற்குள் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படமும் நடந்து முடிப்பதாய் முடித்துக் கொண்டார்கள்.

 பாலுவாக வரும் விஷால் அதே பழைய எனர்ஜியுடன் சண்டை போடுகிறார். அவருக்கு இணையாக ராஜ்கிரணும் தோன்றும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்துவிடுகிறார். ஆனால், ‘நடிகையர் திலகம்’ பேசும் ஒட்டாத மதுரைத் தமிழும், முறைப்புடன் டார்க் மேக்அப்பில் வரும் வரலட்சுமியும் அயர்ச்சியையே தருகிறார்கள்.

 அன்பு கதாப்பாத்திரத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவது எனும் ஒற்றை இலக்கிலேயே ஒட்டுமொத்த படமும் நகர்வதால் நீளமாக தோன்றுகிறது. 

ஊர்த் திருவிழாவில் ஓடியாடி எல்லா வேலைகளையும் செய்யும் துரை ஐயாவை வீட்டிற்குள் மறைத்து விஷால் வேடிக்கை காட்டும் காட்சிகளை யாராலும் நம்ப முடியாது.

‘கம்பத்து பொண்ணு’ பாடலில் மட்டும் கொஞ்சம் ரசிக்க வைக்கும் யுவன்ஷங்கர் ராஜா, மற்றப் பாடல்களிலும் பின்னணி இசையிலும் ‘யுவனா இசை?’ என அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். அவர்கள் தவிர ஒரு ஊர்த் திருவிழாவை அதன் தன்மை மாறாமல் வண்ணமயமாய் படமாக்கிய சக்திவேலும், அதை தத்ரூபமாக வடிவமைத்த சம்பத் திலக், சேகர் கூட்டணியும் பாராட்டுக்குரியவர்கள். 

அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள் தனித்தன்மையோடு திரையில் மிளிர்கிறது.

 ஐயாவிற்கும் சின்ன ஐயாவிற்கும் பில்டப் ஏற்றுவதற்கான மெனக்கெடலையும் சேர்த்து திரைக்கதையில் செலுத்தியிருந்தால் இன்னும் கம்பீரமாக நின்று சண்டை போட்டிருக்கும் இரண்டாவது முறையாக சீறிப் பாய்ந்த இந்தச் சண்டக்கோழி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close