[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

“உங்க காட்சிகள் நன்றாக வந்துள்ளதா என ரஜினி கேட்டார்”- ஷபீர் ‘பேட்ட’ அனுபவம் 

it-s-been-a-great-experience-working-in-petta-shabeer

கார்த்திக் சுப்புராஜ் கை வண்ணத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘பேட்ட’. இதில் மிக இளம் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் செப்டம்பர் மாதம் வெளியானது. அதில் ரஜினி ஒரு தேவாலயத்தின் பின்புலத்தில் இருப்பதை போலவும், ஆக்‌ஷன் காட்சியை விளக்குவதை போலவும் இருந்தது. இதற்காகவே பிரத்யேகமாக மோஷன் போஸ்டர் வடிவில் போஸ்டரை வெளியிட்டிருந்தது படக்குழு. அடுத்து செகண்ட் லுக் அக்டோபர் 4ஆம் தேதி வெளியானது. இதில் ரஜினி, தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையில் இளமையான தோற்றத்தில் இருந்தார். 

இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இதில் ’நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தில் நடித்த ஷபீரும் நடித்துள்ளார். அவர் தனது அனுபவங்களை டைம்ஸ் ஆப்ஃ இந்தியா பத்திரிகையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “என் கதாப்பாத்திரம் முக்கியமானது. நான் இந்த வாய்ப்புக்காக இயக்குநரை தேடி போய் சத்தித்தேன். சில காலம் கழித்து எனக்கு அவரிடமிருந்து போன் வந்தது. குறிப்பிட்ட பாத்திரத்தை சொன்னார். உண்மையாக சொன்னால் நான் அந்தப் பாத்திரத்திற்காக நான்கு முறை ஆடிஷன் செய்தேன். நான் ஆடிஷன் செய்யும் போதே இந்தப் பாத்திரம் தனித்துவமானது என மனதில் புரிந்து கொண்டேன். ஆகவே அதில் நடிக்க விரும்பினேன். எனது ஷுட்டிங் முழுக்க முடிந்துவிட்டது. லக்னோ, சென்னை என பல பகுதிகளில் எடுத்தார்கள்.” எனக் கூறியுள்ளார். 

இவருக்கு மூன்று உச்ச நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படத்தில் கிடைத்துள்ளதாம். ரஜினி, நாவாஸுதீன் சித்திக், விஜய்சேதுபதி என மூன்று பேருடனும் ஒரே நேரத்தில் நடிப்பது என்றால் சும்மாவா? “இந்த மூன்று பேருடனும் இணைந்து நான் நடிப்பதை கார்த்திக் சுப்புராஜ் அமைத்து தந்துள்ளார்.  முதன்முறையாக ரஜினியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். என் கனவு நிஜமானதை உணர்ந்தேன். 

ரஜினியிடன் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர் என்னை பார்த்ததும் ‘உங்க காட்சிகள் சரியாக வந்துள்ளதா?’ என்று கேட்டார். என்ன ஒரு எளிமை? மக்கள் அவரை எளிமையானவர் என்கிறார்கள். அது முற்றிலும் உண்மை.” என்கிறார் ஷபீர். 

“விஜய் சேதுபதி என் காட்சிகளை மேலும் சிறப்பாக்க பல யோசனைகள் கொடுத்தார். எங்களுக்குள் நல்ல பரஸ்பரம் இருந்தது. ‘பேட்ட’ எனக்கு சிறப்பான அனுபங்களை கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் வேலை செய்த அனுபவம் 10 படங்களில் கற்றுக் கொள்ளும் பாடங்களை எனக்கு வழங்கி இருக்கிறது.” என்கிறார் ஷபீர்  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close