[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

வைரமுத்து ஒரு பொய்யர் - பாடகி சின்மயி

singer-chinmayi-said-sexual-harassment-allegation-on-writer-vairamuthu

பாடலாசிரியர் வைரமுத்து ஒரு பொய்யர் என பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். 

சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு ட்விட்டரில் மறைமுக பதில் கூறிய வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக் காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” எனக் தெரிவித்தார். 

இந்நிலையில், வைரமுத்துவின் ட்விட்டை குறிப்பிட்டு, ‘பொய்யர்’ என சின்மயி பதிலளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close