[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

’என்னை அடித்து உதைத்தார்': புகைப்படம் வெளியிட்டு தமிழ் நடிகை அதிர்ச்சி!

actress-flora-applauds-women-speaking-up-on-sexual-harassment

ஒரு வருடமாக பாலியல் சுரண்டலுக்கு என்னை ஆளாக்கி, தயாரிப்பாளர் என்னை அடித்து உதைத்து, தாடையை உடைத்தார் என்று நடிகை புளோரா பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகாரை கூறியிருந்தார். அவருக்கு பல்வேறு நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனவத், 'குயின்' இயக்குனர் மீது பாலியல் புகாரைக் கூறியிருந்தார். இதையடுத்து மேலும் சில நடிகைகள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விஷயங்களை வெளியே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை புளோரா புகைப்பட ஆதாரத்துடன் தான் தாக்கப்பட்ட விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.

இவர், தமிழில் விஜயகாந்தின் ’கஜேந்திரா’, கார்த்திக்கின் ’குஸ்தி’, ரஜினியின் ‘குசேலன்’, கருணாசின் ‘திண்டுக்கல் சாரதி’ உட்பட பல படங்களில் நடித்தவர். ஆஷா சைனி என்ற பெயரில் தெலுங்கு படங்களிலும் நடித்துவந்தார். இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டில் பிரபல இந்தி தயாரிப்பாளர் கவுரங் தோஷி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாடையை உடைத்து துன்புறுத்தினார் என்று பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அப்போது காயத்துடன் எடுக்கப்பட்ட
புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் கவுரங் தோஷி, தீவார், ஆங்கென் உட்பட சில படங்களைத் தயாரித்துள் ளார். 

தோஷி தன்னை தாக்கிய சம்பவம் பற்றி சமூக வலைத்தளத்தில் புளோரா கூறியிருப்பதாவது:

2007 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தோஷியால் தாக்கப்பட்டேன். அதற்கு முன் அவருடன் டேட்டிங்கில் இருந்தேன். ஒரு வருடம் அவரால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தேன். ஒரு தவறும் செய்யாத நான் அவரால் தாக்கப்பட்டு என் தாடைகளின் எலும்பு முறிந்த நிலையில் பயத்துடன் வெளியே வந்தேன்.

அப்போது இந்தச் சம்பவம் எனக்கு எதிராகவே போனது. ஏனென்றால் தோஷி அப்போது சக்தி வாய்ந்தவராக இருந்தார். நான் சொன்னதை யாரும் நம்பவில்லை. ஏனென்றால் நான் திரைப்படத்துறைக்கு புதிதாக வந்தவள். அவரும் இதையே சொன்னார். என்னை மிரட்டினார். என்னை சினிமாவில் இருந்து ஒழித்துவிடுவேன் என்றார். சொன்னது போலவே அதை நம்பவைக்கும் செயல்களையும் செய்தார். சில படங்களில் இருந்து நான் மாற்றப்பட்டேன். ஆடிஷனுக்கு என்னை அழைக்க மறுத்தனர். இதனால் மனம் உடைந்தேன். யார் பின்னாலாவது ஒளிந்துகொள்ள முயன்றேன். இதற்கு பிறகு என் வாழ்க்கை மாறிவிட்டது. 

இப்போது, பெண்கள் தைரியமாக தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விஷயத்தை வெளியே சொல்கின்றனர். இது வரவேற்கத்தக்கது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன். கடவுள் மட்டுமே நம் விதியை கட்டுப்படுத்த முடியும், உங்கள் உண்மையுடன் வாழுங்கள். இப்போது நீங்கள் தனியாக இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இவ்வாறு புளோரா தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஏராளமானோர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close